அமெரிக்காவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள கென்ட் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி சீக்கியர் தீப் ராய். இவர் தனது வீட்டுக்கு வெளியே இருந்த தன் பைக்கில் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மர்ம நபர், அமெரிக்கா உன் நாடா? உன் சொந்த நாட்டுக்கே திரும்பி ஓடிவிடு என்று கூறியபடி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளார். இதில் தீப் ராயக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உயருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் தன்னை நோக்கி சுட்ட நபர், 6 அடி உயரம் இருந்ததாகவும் மூகமூடி அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் மீதான நிறவெறித் தாக்குதல்கள் நடக்கின்றன. குறிப் பாக, கடந்த மூன்று நாட்களில் தினமும் ஒரு இந்தியர் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி யுள்ளார்கள். புதன்கிழமையன்று கன்சாஸ் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்டார். விழாயக்கிழமை லங்காஸ்டர் நகரில் ஹர்னிஷ் படேல் என்ற மற்றொரு இந்தியர் தன் கடைக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை லங்காஸ்டர் நகரின் ஷெரீப் அலுவலங்கத்திற்கு அருகிலேயே நடந்திருக்கிறது. மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீப் ராய் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார். நாளுக்கு நாள் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறித் தாக்குதல்கள் அமெரிக்காவில் அதி கரித்தபடியே வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கவாழ் இந்தியர்களும் பல் வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், அந்நாட்டில் தொடரும் இந்தி யர்களுக்கு எதிரான நிறவெறித் தாக்குதல்கள் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்