இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டது. அதில் சர் வதேச நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் மே மாதம் உச்சக்கட்டப் போர் நடந்தது. இதில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2011-ம் ஆண்டில் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. நிபுணர்கள் குழுவும் இந்த படுகொலைகளை உறுதிப்படுத்தியது. இதையடுத்து இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா. சார்பில் விசாரணை குழு ஒன்று 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு அப்போதைய அதிபர் ராஜபக்சே அனுமதி மறுத்தார். இதை யடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு புதிய அதிபர் சிறிசேனா அனுமதித்தார். இதன்பின்னர் ஐ.நா.மனித உரி மைகள் ஆணையம் விசாரணை நடத்திய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் மீட்கவேண்டும். பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பாலியல் கொடுமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்