கொழும்பு,
தனது கட்சியின் அதிபர் வேட்பாளரை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான பசில் ராஜபக்சே தெரிவித்தார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இத்தக வலை வெளியிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவே போட்டியிடுவார். ஆகஸ்ட் 11ஆம் தேதி நடை பெறவுள்ள கூட்டத்தில், பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொள்வார். அதிபர் தேர்தலில் வெற்றியைப் பெறுவத ற்கான திட்டம் குறித்து பின்னர் வெளிப்படுத்தப்படும். அனைவரும் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்