சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை கடிதத்தை அரசு அலுவலகம், மாகாண சபை, ஊராட்சி மன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வழங்கியுள்ளார்.
வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கையின் 72ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு அரசு அலுவலகம், மாகாண சபை, ஊராட்சி மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளது. இதற்கமைய சுதந்திர தின நிகழ்வில் சிங்களமொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணான செயல்பாடு கிடையாது எனவும் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அடையாளம் என்பதுடன் வெவ்வேறு இனங்களை ஒன்றிணைக்கின்றதாக அமையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்