ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று அடுத்தடுத்து இரண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மேற்கு காபூலில் உள்ள காவல்நிலையம் மீது தற் கொலைப்படை பயங்கரவாதிகள் கார்வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தினர். முன்னதாக, போலீஸ்காரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடுத்தடுத்த இரு தாக்குதலில் 12 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த இருதாக்குதல்களுக்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:- “பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. எனவே, ஆப்கானிஸ்தான் மக்களின் வேதனைகளை பு இந்தியாவால் புரிந்து கொள்ள முடிகிறது. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் நலமுடன் திரும்பு வார்கள் என்று உறுதியுடன் நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்