வங்கதேசத்தில் இனி 14 வயது சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற புதிய திரு மணச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் திருமண வயது வரம்பு சட்டம் நடை முறையில் உள்ளது. இவற்றையும் மீறி அங்கு சிறுவர் சிறுமிகளுக்கான திருமணங்கள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், இதிலும் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்கள் இருந் தால் 14 வயது பூர்த்தி அடைந்த சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு திருமண வயது 18 என்று குறிப்பிட்டு விட்டு மற்றொரு பக்கம் சில காரணங் களுக்காக 14 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 14 வயது சிறுமிகளுக்கும் தாராளமாக திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் ஒரு சில அமைப்புகள் இச்சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதா கவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்