கழிவறைகளை அமைத்துக்கொள்ள முடியாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈழம் பற்றி பேசுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தி யுள்ளது.இலங்கையில் பிரிவிணைவாதத்தை ஏற்படுத்த முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையை அடகு வைக்கக் கூடாது. மாறாக தமிழக அப்பாவி மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது பொருத்தமானது. தமிழகத்தில் வாழும் அப்பாவி மக்களுக்கு கழிவறைகளை அமைத்துக் கொடுக்க முடியாத முதல்வர் இலங்கையில் பிரிவிணைவாதத்தை தோற்று விக்கும் கருத்துக்கள் வெளியிடுகின்றார். இவ்வாறான கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் வெளியிட்ட கருத்துக்கள் தெற்கின் சிங்கள ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சாந்த பண்டார இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்