ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரவுள்ளதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்ட தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இதில் கலந்துகொள்வதற்கு வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இலங்கை பிரதிநிதிகள் குழு ஜெனிவா சென்றுள்ளது. இந்த குழுவில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்த வெலவும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மனோ தித்த வெல இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோர முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர் பில் பிரித்தானியா இந்த கூட்ட தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்