அமெரிக்க பொருட்களையே வாங்கவும், அமெரிக்கர்களையே வேலைவாய்ப்பில் பணியமர்த்தவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது தேர்தல் பிரசாரத்தின்போது, வலியுறுத்திய இறுக்கமான கருத்துக்களையே மீண்டும் முன்வைத்தார். கார்பொரேட் வரிகளை குறைத்து, வணிக கொள்கைகளை மாற்றியமைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ஏதுவான சூழல் உருவாக்கப்படும் என றுதியளித்தார். அமெரிக்க பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பிற நாடுகள் அதன் மீது அதிக வரி விதிக்கின்றன. பிற நாட்டு பொருட்கள் அமெ ரிக் காவில் பெரிய வரி விதிப்பின்றி நுழைகின்றன. இந்த நிலை மாற வேண்டும். அமெரிக்க பொருட்களையே வாங்குவது, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துவது என்பதே இந்த அரசின் கொள்கை. பைப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்தே இரும்பு பொருட்களை வாங்குவது என்று உறுதியேற்க வேண்டும் என்றார் ட்ரம்ப்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்