வாஷிங்டனில் நடைபெற்ற அரசியல் நடவடிக்கை தொடர்பான மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அமெரிக்க வரலாற்றில், இதுவரையில் இல்லாத அளவிற்கு சிறந்த ராணுவம் உருவாக்கப்படும். தற்காப்பு மற்றும் தாக்குதல் பிரிவில் ராணுவம் மேலும் மேம்படுத்தப்படும். இருப்பினும் நாம், எப்போதும் நம்முடைய ராணுவத்தை பயன்படுத்த போவதில்லை என்று நம்புகிறேன். நம்நாட்டில் யாரும் குழப்பம் ஏற்படுத்த போவதில்லை என்றும் தெரிவித்தார். மார்ச் மாதம் ட்ரம்ப் அரசின் பட்ஜெட் வெளியாகவுள்ள நிலையில், அவருடைய பேச்சு, ராணுவத்திற்கு பட்ஜெட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் பட்ஜெட்டில் அமெரிக்க மக்களுக்கு வரிகள் குறைப்பு அறிவிப்பும், ஏழை மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்