தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியா தான் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங் கைக்கு ஆயுதங்களை வழங்கின. அப்போது இந்தியாவோ இலங்கை ராணுவத்தினருக்கு மிக முக்கியமான பயிற் சிகளை வழங்கியது. பல ஆண்டுகளாக இந்தியாதான் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சிகளை வழங்கியது. தமிழகத்தின் நெருக்கடியால் இந்தியாவில் இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்க முடியவில்லை. இருப்பினும் எங்களது ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல உதவிகளை செய்தது இந்தியா. சீனாவின் ஆயுதங்களைத்தான் நாங்கள் பிரதானமாக பயன்படுத்தினோம். சீனாவையே நாங்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தோம். இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்