அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், தங்கள் பிறப்பு சான்றி தழில் உள்ள பாலினத்தின்படி உள்ள கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைக்கு தான் செல்ல வேண்டும் என டிரம்ப் சட்டம் கொண்டுவரவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை விடயத்தில் ஆண் அல்லது பெண் அறையை அவர்கள் விருப்பம் போல பயன்ப்படுத்தலாம் என சட்டம் கொண்டு வந்தார். ஆனால் இந்த சட்டத்தை மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி பிறப்பு சான்றிதழில் உள்ள பாலினத்தின் படி தான் அவர்கள் அதற்கேற்ப அறைக்குள் போக வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் Sean Spicer கூறுகையில், பெண்கள் உடை மாற்றும் அறையில், ஆண்கள் தன்மை கொண்ட திருநங்கைகள் போனால் அது பெண்களின் பாதுகாப்புக்கு கேள்விகுறியாகிறது.இதை மனதில் வைத்து இந்த சட்டம் கொண்டுவரப் படவுள்ளது என கூறியுள்ளார்.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்