img
img

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னின் சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை !
புதன் 15 பிப்ரவரி 2017 15:46:05

img

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு பெண்களை ஏற்றிச்சென்ற டெக்சி ஓட்டுனரை போலீஸ் பிடித்துள்ளதாக ஓரியெண்டல் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் ஓரியெண்டல் டெய்லி, அப்பெண்கள் இருவரும் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் கோலாலும்பூர் அனைத் துலக விமான நிலைய(கேஎல்ஐஏ) த்தின் டெக்சி நிறுத்தத்தை நோக்கிச் செல்வதைக் கண்காணிப்பு கேமிராக்கள் காண்பிப்பதாக தெரிவித்தது. இருவரும் டெக்சி ஏறியதையும் அது காண்பித்தது.“சிசிடிவி கேமிரா படத்தை வைத்து போலீஸ் டெக்சி ஓட்டுனரைப் பிடித்தது”, எனத் தகவலளித்த வட்டாரம் தெரிவித்தது.அப்பெண்கள் தாங்களிரு வரும் வியட்நாமியர்கள் என்று டெக்சி ஓட்டுனரிடம் தெரிவித்தார்களாம். அவ்விருவரும் எப்படி கிம்மை கொன்றார்கள் என்பதையும் போலீஸ் வட்டாரம் விவரித்திருக்கிறது “கிம் புறப்பாட்டு மண்டபத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது இருவரும் அவரை நெருங்கினார்கள். “ஒருவர் விஷத்தை அவர்மீது பீய்ச்சி(ஸ்ப்ரே) அடித்தார். மற்றொருவர் ஒரு கைக்குட்டையால் கிம்மின் முகத்தை 10 வினாடிகளுக்கு அழுத்தி மூடிக்கொண்டார்”, என்று அந்த போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.அவர்கள் பயன்படுத்திய விஷம் என்னவென்பதை அந்த வட்டாரம் தெரிவிக்கவில்லை, ஆனால், “அது சயனட்டைவிட ஆற்றல்மிக்கது” என்று மட்டும் குறிப்பிட்டது. இதனிடையே, கேஎல்ஐஏ சிசிடிவி கேமிராவில் பதிவான ஒரு பெண்ணின் படத்தை தென்கொரியாவின் 24-மணிநேர செய்தித் தொலைக்காட்சியான ஒய்டிஎன் வெளியிட்டிருந்தது. அதே படம் இன்றைய மலாய் மெயிலிலும் வெளிவந்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img