2 சிறுவர்களை தற்கொலை தாக்குதலுக்கு உட்படுத்திய வீடியோவை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாங்கள் செய்யும் பயிற்சிகள் மற்றும் அடுத்து எந்த நாட்டை குறிவைக்கப்போகிறோம் என்பது குறித்து வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்கள். இந்நிலையில் இரண்டு சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தற்கொலை தாக்குதலுக்கு உட்படுத்தி யுள்ளனர். அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு சிறுவர்கள் முதலில் பயிற்சி செய்கிறார்கள், அதன் பின் கார் ஓட்டியும் பயிற்சி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஒரு சிறுவன் இராக்கின் Sinjar பகுதியில் இருந்து பயங்கர வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை தங்களுடைய எதிரிகள் இருக்கும் தெருவிற்கு ஓட்டிச் செல்கின்றான். அங்கு சென்றவுடன் கார் வெடித்துச் சிதறுகிறது. இதில் அச்சிறுவன் இறக்கிறான். இதே போன்று மற்றொரு சிறுவனும் அதே பகுதியில் உள்ள மற்றொரு தெருவில் காரை ஓட்டிச் செல்கிறான். குறித்த இடத்தைச் சென்றவுடன் கார் வெடிக்கிறது.ஐஎஸ் தீவிரவாதிகள் சிறுவர்கள் தற்கொலை தாக்குதலுக்கு உட்படுத்துவது இது ஒன்றும் முதல் முறை இல்லை என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் Baghdad பகுதியின் Kirkuk பகுதியில் சிறுவன் ஒருவனை அவர்கள் தற்கொலை படை தாக்குதலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்