அமெரிக்காவில் புதிய பயணத்தடை விரைவில் அமல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் 7 நாடுகளை சேர்ந்த அகதிகள் நுழைய கூடாது என ஜனாதிபதி டிரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க நீதித்துறை தற்காலிக தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மேல் முறையீடு செய்த நிலையில், டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இந்நிலையில் விமானப்படையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது, விரைவில் புதிய தடை உத்தரவு அமல்படுத்தப்படும். அனேகமாக திங்கள் அல்லது செவ்வாய்கிழமை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதில் எந்தந்த நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் குறிப்பிடவில்லை.எனினும், முன்னதாக அமல்படுத்தப்பட்ட சட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்து புதிய பயணத்தடை அமல்படுத்தப்படும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்