நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு மாத கைக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. அர்லா அடிப் என்ற கைக் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமுற்றது. இக்குழந்தை யின் குடும்பத்தினரின் கார் ஜாலான் ரிம் ஜாசின் என்ற சாலையில் மற்றொரு வாகனத்துடன் விபத்தில் சிக்கியது. அர்லா அடிப்பின் குடும்ப உறுப்பினர் நால்வர் பண்டார் ஜாசினிலிருந்து பெல்டா புக்கிட் செங்கேவில் உள்ள வீட் டிற்கு செல்லும்போது இவ்விபத்து ஏற்பட்டது. திடீரென்று வளைந்த வாகனத்தை குழந்தையின் உறவினர் ஓட்டி வந்த கார் தவிர்க்க முடியாமல் போய்விட்டது என்று போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார். நான்கு சக்கர வாகனத்தின் மத்திய பகுதியுடன் கார் மோதியது. அப்போது முன் இருக்கையில் தாயின் மடியில் குழந்தை வீற்றிருந்தது. இறந்து போன பச்சிளங் குழந்தை மலாக்கா மருத்துவமனையில் தடயவியல் பிரிவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜாசின் மருத்துவமனையில் குழந்தையின் குடும்பத்தினர் சிகிச்சை பெற்றனர்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்