இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19 ஆய்வுக் கூடங்கள் முறியடிக்கப்பட்டன.
இக்கால கட்டத்தில் வெ.27.29 கோடி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருளை அமலாக்கத் தரப்பினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது உண்மையில் கடந்த 1983 தொடங்கி நாட்டின் முதல் எதிரியாக இருக்கும் போதைப்பொருளை முறியடிப்பதில் அமலாக்கத் தரப்பினரின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
பொதுவாக போதைப்பொருளில் இருந்து விடுபட்ட நாடு என்ற நிலையை அடைவது சாத்தியமற்றது என்பது அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும் அமலாக்கத் தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முயற்சியின் மூலம் சமூகப் பிரச்சினைகளுக்கு வித்திடும் இதை முறியடிக்க அரசு முனைகிறது.
போதைப்பொருளுக்கு எதிராகப் போராடும் அரசின் நோக்கம் 2030 பகிரப்பட்ட செழிப்புத் திட்ட இலக்கில் (டபள்யூ.கே.பி. 2030) மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதோடு பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக் கொள்கைக்குக் குறிப்பிட்ட ஓர் அடித்தளமாகவும் விளங்குகிறது.
இதனிடையே, தொடர்ச்சியான இம்முயற்சிக்குத் தடுப்பு, அமலாக்கம் மற்றும் சட்டக் கல்வி அணுகுமுறை வாயிலாக கவனம் செலுத்தப்படுவதோடு பல்வேறு தரப்பினரிடமிருந்து வியூக ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று குற்றவியல் நிபுணர், டத்தோஸ்ரீ அக்பார் சத்தார் தெரிவித்தார்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்