2020ஆம் ஆண்டிற்கான முதலாவது பி.எஸ்.எச். எனப்படும் வாழ்க்கைச் செலவின உதவித் தொகை இம்மாதம் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 38 லட்சம் பேருக்கு இந்த வாழ்க்கைச் செலவின உதவித் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் 100 கோடி வெள்ளியை செலவிட வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
மாதம் 2 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோருக்கும், 2,001 வெள்ளி முதல் 3 ஆயிரம் வெள்ளி வரை வருமானம் பெறுவோருக்கும், 3,001 வெள்ளி முதல் 4 ஆயிரம் வெள்ளி வரை வருமானம் பெறுவோருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாண்டு பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைப்பதை உறுதிப்படுத்த அவர்களின் வருமானம் குறித்து பல்வேறு அரசாங்க அமைப்புகளுடன் உறுதிப்படுத்தப்படும் என்ற அவர், அவர்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனரா என்பதும் இதில் அடங்கும் என்றார்.
கடந்த ஆண்டுக்கான உதவித் தொகை பெற்றவர்களின் வங்கி கணக்கை அடிப்படையாகக் கொண்டு இம்மாதம் 20ஆம் தேதி முதல் கட்டமாக அவர்களின் வங்கி கணக்கில் 300 வெள்ளி சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு மேற்கண்ட உதவித் தொகைக்கு மனு செய்ய விரும்பும் பொதுமக்கள் வரும் பிப்ரவரி முதலாம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை அதற்கு மனு செய்யலாம் என்றார்.
குடும்பத் தலைவர்களைத் தவிர்த்து 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதைப்போல் 40 வயதுக்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத நபர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
கடந்த ஆண்டு பி.எஸ்.எச். எனப்படும் வாழ்க்கைச் செலவின உதவித் தொகை கிடைக்கப் பெற்றோரின் விவரங்களில் எந்தவித மாற்றம் இல்லாத நிலையில் அவர்கள் மறுவிண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்றார்.
ஆனால், இவ்வாண்டு புதிதாக பி.எஸ்.எச். உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் பொதுமக்களும் கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்ட மனுதாரரும் மீண்டும் புதிதாக மனு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்