இந்நாட்டில் வேலை செய்வதற்கு அரசாங்கம் மீண்டும் வங்காளதேச தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கவுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.
விரைவில் அது தொடர்பான புதிய புரிந்துணர்வு உடன்பாடு ஒப்பந்தம் குறித்து வங்காளதேச அரசாங்கத்துடன் மனிதவள அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதன் அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.
வங்காளதேச தொழிலாளர்களை எளிமையான முறையில் வேலைக்குச் சேர்ப்பதற்கு கடுமையான விதிமுறைகள் அவசியம் தேவை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
குறைந்த செலவிலும் வெளிப்படையானப் போக்கிலும் வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கான நடைமுறையை மலேசியா அமல்படுத்தும் வரை அந்நாட்டிற்கு வங்காளதேச தொழிலாளர்களை அனுப்புவதில்லை என்று வங்காளதேச அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் டெய்லி ஸ்டார் பத்திரிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளி யிட்டிருந்தது.
இதற்குப் பதிலளிக்கையில் மனிதவள அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வங்காளதேச தொழிலாளர்களை எந்தவிதப் பரிசோதனையுமின்றி அங்கிருந்து அனுப்பும் முறையில் முதலில் மாற்றம் காண்பது அவசியமாகும். இதனையே அவர்கள் செய்ய முயன்று வருகிறார்கள் என்று நேற்று தமது அமைச்சில் நடைபெற்ற வாடிக்கையாளர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
வங்காளதேச தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வருவதற்கு ஏஜெண்டுகள் அதிக பணத்தை வாங்குவது உட்பட அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டதும் துன்புறுத்தப்படுவது மீதான புகார்களும் எங்களிடம் உள்ளன.
நேப்பாள் நாட்டுடன் புரிந்துணர்வு உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, தொழிலாளர்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் விதிக்கப்படக் கூடாது என்ற விதிமுறை இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
தொழிலாளர்களுக்கு இயல்பான கட்டணம் அவசியம். அது அவர்களின் விமான டிக்கெட்டைத் தவிர இதர செலவுகள் அனைத்தும் முதலாளிகளால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்