போலீஸ் காவலின் போது மரணமடையும் சம்பவங்கள் நம்நாட் டில் புதிதானது ஒன்றும் கிடையாது. அடிக்கடி இது போன்ற சம் பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது, என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். கடந்த 2000-த்தாம் ஆண்டிலிருந்து 2013 வரையில் மொத்தம் 233 பேர், 2013-இல் 19 பேர், 2014-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங் களில் 4 பேர் என மொத் தம் 256 பேர் போலீஸ் காவலின் போது மரண மடைந்துள் ளனர். தேசியப் போலீஸ் துறை யினரால் சேகரிக் கப்பட்ட புள்ளி விவர அறிக்கை இவ்வி வரத்தைக் காட்டுவதாக சார்ல்ஸ் கூறினார். இதன் தொடர்பில், குற்றவாளிகளாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் மீது விசாரணை நடத்தும் போலீஸ் துறை யினருக்கு விதிக்கப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கை விதிமுறைகள் நெறியற்ற வழியில் தொடர்ந்து எல்லை மீறப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட மரண சம்பவ விவகார நடவடிக்கைகள் தெளிவாக நிரூபித்துக் காட்டும் வகையில் உள்ளதாக சுட்டிக் காட்டிய அவர், இது போன்ற திடீர் மரணச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் இவ்விவ காரத்திற்குத் தீர்வு காணும் வகையிலும் போலீஸ்துறையின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை, பொதுப்புகார் தொடர்பான சிறப்பு சுயேட்சை விசாரணைக்குழு ஒன்று உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்