நியூசிலாந்தின் சவுத் ஐலேண்டின் வட முனையில் கோல்டன் பே யிலுள்ள பேஃர்வெல் ஸ்பிட் பகுதி யில் 416 மாலுமி திமிங்கிலங் கள் கரை ஒதுங்கிய நிலை யில் அவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக் கப் பணி யாளர்கள் போராடி வருவதாக பிராணிகள் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. இப்பகுதியில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது வழக்கமானது தான். எனினும் இம்முறை அதிக எண்ணிக்கையிலான திமிங் கிலங்கள் கரை ஒதுங் கியுள்ளன என அத்துறையின் வட்டார நிர்வாகி எண்ட்ரு லமாசான் கூறியுள்ளார். கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 70 விழுக்காடு அழுகிவிட்டன. எஞ்சியவற்றை ஆழ்கடலில் பேரலை பகுதி யில் கொண்டு விடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. எஞ்சியுள்ள திமிங்கிலங்களின் ஆரோக்கியமும் மன நிறைவளிப்பதாக இல்லை என்று அவர் ரேடியோ நியூசிலாந்தில் கூறியுள்ளார். பேஃர்வெல் ஸ்பிட் பகுதி யிலுள்ள விரிகுடா ஆழமில்லாதது ஆகும். அப்பகுதியில் சிக்கும் திமிங்கிலங்கள் வெளிச் செல்வதற்கான வழியை கண்டு பிடிப்பது மிகவும் சிரமம் என்றும் அவர் கூறியுள்ளார். -ஏஎப்பி
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்