அமெரிக்காவில் உள்ள தேசிய தகவல் கவுன்சில், அனைத்து நாடுகளின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து பொருளாதார சர்வே எடுத்து உலகின் தற்போதைய போக்கு என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் அபரீத வளர்ச்சி பெறும். இந்தியாவின் ஆற்றலுக்கு முன்பு பாகிஸ்தான் ஈடாகாது. இந்தியாவுக்கு சமமான நாடு என்று காட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து பாகிஸ்தான் போலி தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அவர்களால் சமமாக முடியாது. சீனா பொருளாதாரத்தில் எப்படி துரித வளர்ச்சியடைந்ததோ அது போன்று இந்தியா வளர்ச்சி பெறும். ஆனால் இந்தியாவில் நிலவும் உள்நாட்டு பூசல்கள், ஏற்றத்தாழ்வு, மதம் சார்ந்த விஷயங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். பாகிஸ்தான் பல்வேறு நாடுகளை அணுகி பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவியை பெறும். தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதனால் நவீன ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு நிதி வளத்தை இழக்க நேரிடும். அடுத்த 5 ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகரித்து வாழ்வாதரத்துக்கு கேடு ஏற்படும். குறைந்த செலவில் அணுஆயுதங்களை தயார் செய்து எல்லையில் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இருப்பதாக மிரட்டல்கள் விடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் அபரீத வளர்ச்சி பெறும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தப்புக்கணக்கு தோல்வி பெறும். பீஜிங், மாஸ்கோ, வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு இணையாக புதுடெல்லி வளர்ச்சி பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்