அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் தடவையாக சீனாவின் ஜனாதிபதி Xi Jinping உடன் போனில் பேசிய டிரம்ப் சீனாவின் One China கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல நாட்டு தலைவர்களை சந்தித்தும், தொலைபேசியில் உரையாடியும் வந்தார். ஆனால் சீனாவின் ஜனாதிபதியிடம் மட்டும் அவர் இதுவரை பேசாமல் இருந்தார். தற்போது இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். மேலும், டிரம்ப் எதிர்ப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சீனாவை மட்டும் ஆதரித்து, தைவானை ஆதாரிக்க கூடாது எனப்படும் One China கொள்கைக்கு அவர் ஆதரவு அளித்துள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தலைவர்களும் வெகு நேரம் தொலைபேசியில் பேசினார்கள்.அதில், பல தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சீன ஜனாதிபதியின் One China விடயமான வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட டிரம்ப் அதற்கு ஆதரவுளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு Xi Jinping நன்றி தெரிவித்து கொண்டார் எனவும், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கொள்ள பரஸ்பர அழைப்புகளை மேற்கொண்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்