img
img

ஈஃபிள் டவருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் !
வெள்ளி 10 பிப்ரவரி 2017 13:10:05

img

பயங்கரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக ஈஃபிள் டவரை சுற்றி 8 அடி உரத்தில் வலிமையான கண்ணாடி சுவர் எழுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக தலை நிமிர்ந்து நிற்கும் ஈஃபிள் கோபுரத்தை அடுத்த தலைமுறையும் கொண்டாடும் பொருட்டு அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.அதன்படி தற்போது போடப்பட்டிருக்கும் உலோக வேலிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு கண்ணாடி சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாரிஸ் நகர மேயர் அலுவகம் தெரிவித்துள்ளது. குறித்த அதிரடி திட்டத்திற்காக 20 மில்லியன் யூரோ செலவாகும் என்று வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதற்கான பணிகள் துவங்கவும் திட்டமிட்டு வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து தலைநகர் பாரிஸ் உச்சகட்ட பாதுகாப்பு வலையத்தில் உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கடந்த யூலை மாதம் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பயங்கரவாத ஆதரவாளர் ஒருவர் லொறியை செலுத்தி 86 பேர் உடல் நசுங்கி இறக்க காரணமானார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த யூரோ கால்பந்து போட்டிகளின் போது, ஈஃபில் கோபுரத்தைச் சுற்றி உலோக வேலிகள் அமைக்கப்பட்டது. தற்போது திட்டமிட்டுள்ள அந்த கண்ணாடி சுவர் எழுப்புவதால் 3 வகையான நோக்கத்தை பூர்த்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். ஈஃபிள் கோபுரத்தை அழகு படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவது மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தல்களில் இருந்து காப்பது என மேயர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img