இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான சீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதியை, இணையத் தளம் ஊடாக வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமம் மற்றும் நெரிசலை தடுக்கும் நோக்கில் இணையத்தளத்தில் அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. சீகிரியாவிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் மத்திய நிலையத்தில் இந்த வசதி எதிர்வரும் 11ஆம் திகதி கல்வி அமைச்சர் அகில விராஜ் காசியவசம் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கப்படும் அனுமதி பத்திரம் 3 மாதங்களுக்கு செல்லுப்படியாகும். இதேவேளை, 2700 ஆண்டுகளாக பாதுகாக்கப்படுகின்ற இப்பன்கட்டுவ மெகாலித்திக் கல்லறையில் பூமியில் இந்த நிலையம் திறக்கப்படவுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்