டொனால்டு டிரம்பை எதிர்த்து ஜேர்மனி தலைநகர் பெர்லினில் 1200க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக ஆனவுடன் ஈரான், ஈராக், சிரியா, லிபியா உட்பட 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் வர தடை விதித்தார்.மேலும் மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடுக்கும் நோக்கில் எல்லையில் பெரிய தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உலக புகழ்பெற்ற நினைவுச்சின்னமான Brandenburg Gate அருகில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த போரட்டத்தில் ஜேர்மனி, அமெரிக்கா, சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் நாட்டை சேர்ந்த Mahsa Zamani என்னும் இளம்பெண் கூறுகையில், நான் கடந்த ஆறு வருடங்களாக ஜேர்மனியில் வாழ்கிறேன்.இங்கு மருத்துவ படிப்பு படித்து வருகிறேன். தற்போது மருத்துவமனை பயிற்சிக்காக நான் அமெரிக்காவுக்கு வரும் 19ஆம் திகதி செல்ல வேண்டியுள்ளது. டிரம்பின் கொள்கை என்னை பெரிதும் பாதித்துள்ளது. நிலைமை விரைவில் சீராகி நான் அமெரிக்காவுக்கு செல்வேன் என நம்புவதாக கூறியுள்ள Mahsa, என் வாழ்க்கையை அழிக்கும் உரிமையை டிரம்புக்கு தரமாட்டேன் எனவும் கோபமாக கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்