அமெரிக்காவில் இடம்பெற்ற சிசிடிவி கமெரா ஹேக்கிங் தாக்குதல் தொடர்பாக லண்டனில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாஷிங்டனில் இந்த ஆண்டு ஜனவரி 12 மற்றும் 15ம் திகதிக்கு இடையில் பதிவான சிசிடிவி கமெரா காட்சி தரவுகளை கணினியிலிருந்து மர்ம நபர்கள் ஹேக் செய்து கைப்பற்றினர். ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்பு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக ஜனவரி 19ம் திகதி லண்டன் Streatham, நடால் சாலையில் வைத்து 50 வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண்ணை மத்திய குற்ற பிரிவினர்(என்சிஏ) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் பிரித்தானியாவை சேர்ந்தவர் எனவும் பெண் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இருவரும் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை என்சிஏ செய்தி தொடர்பாளர் குறிப்பிடவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்