பிரபல பாப் பாடகி பியான்ஸ், தான் கர்பமாக இருப்பதையும், இரட்டைக் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, அட்லாண்டா போலீஸ் " எல்லோரும் பியான்ஸ் கர்ப்பமாக இருப்பதை கொண்டாடவே விரும்புகிறோம், ஆனால் இதற்கு எல்லாம் துப்பாக்கி குண்டு முழங்கி கொண்டாத முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பத்திரமாக இருங்கள் அட்லாண்டா "என்று ட்விட்டினர். ஒரு பெண் தன் கர்பத்தை தெரிவிக்கிறாள் என்றால் இப்படியா நிற வெறியோடு பேசுவீர்கள், துப்பாக்கி ஆயுதங்களை குறித்து டிவிட்ட வேண்டிய நேரமா அது என்று நெட்டிசன்கள் மற்றும் பியான்ஸின் ரசிகர்கள் டிவிட்களிலேயே காவல் துறையை பொறித்து எடுத்துவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் காவல் துறை ட்விட்டரிலேயே " பியான்ஸை குறித்து வந்த ட்விட் தேவை இல்லாதது தான், நாங்கள் அதற்கு மன்னிப்பு கேட்கிறோம் " என ஒரு மன்னிப்பு ட்விட் வந்த பிறகு தான் நெட்டிசன்கள் அடுத்த வேலையை பார்த்தார்கள்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்