படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அவர் அரசியலில் இறங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.விரைவில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளவுள்ளார். அவருக்கு இளைஞர் விவகாரங்களுடன் தொடர்புடைய பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரவீனா ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார்.25 வயதான பிரவீனா ரவிராஜ், பிரித்தானியாவில் சட்டப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு அண்மையில் நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்