இலங்கையின் சுதந்திர தினம் தழிழர்களுக்கு துக்க தினம் எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் கறுப்புபட்டி போராட்டம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜி லிங்கம், அனந்தி சசிகரன், சர்வேஸ்வரன் போன்றோர் பங்குபற்றினர்.இதன்போது காணமற்போன , கைது செய்யப்பட்ட தமிழ் உறவகள் எங்கே? சர்வதேச விசாரணையே தேவை,தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் மக்களின் ஆக்கரமிக்கப்பட்ட நிலங்களை உடனே விடுவி, புதிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்து, தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கு சர்வதேச மத்தியஸ்தம் முலம் தீர்வு காண், எனும் கோசங்கள் எழுப்பப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 8.15 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்ததுடன் காலை 10 மணி மட்டும் இடம்பெற்றது.இதில் பங்குபற்றிய தாயொருவர் தனது பிள்ளைகளை இராணுவம் கொண்டு சென்றதாகவும் தற்போது வரை அவரை காண வில்லை அவர் எங்கே என நடுவீதியில் இருந்து கதறி அழுதார்.இதன் போது போராட்டம் செய்வதற்கு யாழ் நீதவான் றீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக குறித்த இடத்தை விட்டு கடந்து செல்லும்படியும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அகன்று செல்ல மறுத்தனர். இது பற்றி வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், குறித்த போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில், மீனவர் பிரச்சனை தொடர்பில் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் , சுதந்திர தின நிகழ்வு அன்று ஏ9 வீதியை மறித்து போராட்டம் நடாத்துவதாகவும், யாழ் மாவட்ட செயலகத்தை வழிமறிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் நாம் இங்கு மீனவர் பிரச்சனை தொடர்பில் போராட்டம செய்யவில்லை , ஏ9 வீதியை பொலிஸாரே வழிமறித்துள்ளனர். மற்றும் யாழ் மாவட்ட செயலகத்திற்கு 250 மீற்றருக்கு அப்பாலேயே போராட்டம் செய்கின்றோம். எனவே எமது நியாயபூர்வமான போராட்டம் பற்றி யாழ் நீதவானுக்கு தவறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவி த்தார்.இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்