அரசுக்கு இப்போதைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை, சவால்களில் ஆட்சிக் கவிழ்ப்பை முறியடிப்பதும் முக்கியமாகி விட்டது. குறிப்பாக இந்த ஆட்சிக் கவிழ்ப்பு செயற்பாடுகளிலும் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகின்றது. தேர்தல் காலத்தைப்போன்று இப்போது பொதுக்கூட்டங்களும் மேடைப்பிரச்சாரங்களும் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலையை சம கால அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்றது.இப்போதைக்கு ஆட்சிக் கவிழ்ப்பை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு மகிந்த தரப்பை முற்றாக அடக்கும் நோக்கை குறிவைத்துள்ளது என்றே தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் போர்க்குற்றமும் கூட இப்போதைக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதாகவே நோக்கப்படுகின்றது. புதிதாக இந்தக் கருத்தே இப்போது அரசியல் வாதிகள் உச்சரித்துக் கொண்டு வருகின்றார்கள்.இது வரையில் பொறுமைகாத்த அரசு வேகமான காய் நகர்த்தல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. போர்க் குற்றம் மகிந்த தரப்பு மீது சுமத்தப்பட காத்திருக்கின்றது. குறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா “இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது” என்பதை பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் போர்க்குற்றம் என்ற ரீதியில் வரும் போது அப்போதைய இராணுவத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று போரை வழி நடத்திய பொன்சேகா மீதும் குற்றச்சாட்டுகள் வரக்கூடுமே? ஆனால் இவற்றை தவிர்த்து வெளிப்படையாகவே பொன்சேகா போர்க்குற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு இப்போதைய அரசின் தூண்டுதலே காரணம் எனவும் கூறப்படுகின்றது.கடந்த காலங்களில் ஏற்பட்ட அனைத்து விதமான குற்றச் செயல்களுக்கும் கோத்தபாய, மகிந்தவே காரணம் என பகிரங்கமாக இப்போது பொன்சேகா தெரிவித்து வருகின்றார்.இத்தனை காலம் பொறுமை காத்த அவர் இப்போது கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளது அரசு தரப்பின் தூண்டுதலே. அதே போன்று முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வாவும் கூட மகிந்த, கோத்தபாய மீது முறைப்பாடுகளை பதிவு செய்து விட்டார். அதே போல் மிக் விமான மோசடி தொடர்பில் கோத்தபாய இப்போது கைது ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலத்தில் ஈடுபட்ட கொலைகள் வெள்ளை வேன் கலாச்சார விசாரணைகளும் கூட இப்போது சூடு பிடித்துள்ளது. அதன் படி மகிந்த அணியின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியானதைப்போல அவருடைய அனைத்து கதவுகளும் வேகமாக அடைக்கப்பட்டு வருகின்றது. மகிந்தவின் அரசியல் பலங்களும் கூட ஒரு பக்கமாக களையப்பட்டு வருகின்றது. இருந்தாலும் சளைக்காமல் முன்னேற நினைக்கும் மகிந்த எடுத்து வைக்கும் படிகளும் தோல்வியாகவே கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச கடுமையான மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் படி பார்ககும் போது அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்து விட்டதா எனவும் சந்தேகம் வெளிப்படுத்தப்படுகின்றது.குறிப்பாக மகிந்த ஆட்சியை பிடிப்பதாக கூறி செயற்படுவதற்கு காரணம் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக் கொள்ள அல்லது மக்கள் ஆதரவை பெற்று அதன் மூலம் கைது ஆபத்தில் இருந்து தப்பிக்கவுமே என்றும் அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணம் மக்கள் செல்வாக்கை பெற்று விட்டால் மகிந்த மற்றும் கோத்தபாய மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது கடினம் அதனாலேயே அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.எவ்வாறாயினும் இப்போதைய அரசியல் நிலவரப்படி மகிந்த மற்றும் கோத்தபாய அரசியலில் பரிதாப நிலையில் இருப்பதாகவும், அவர்களுடைய அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்