கடந்த மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல அதிரடியான திட்டங்களை முன்னெடுத்துள்ளார். அத்துடன், பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். அந்தவகையில், அவுஸ்திரேலிய பிரதமருடன், அண்மையில் தொலைபேசியில் ட்ரம்ப் உரையாடியிருந்தார்.எனினும், இந்த உரையாடல் சுமூகமற்ற முறையில் முடிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். எனினும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ட்ரம்பின் அகதிகள் கொள்கை , குறித்த உடன்படிக்கையினை கேள்விக்கு உட்படுத்தியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, அவுஸ்திரேலிய பிரதமருடனான நேற்றைய உரையாடலின் போது, குறித்த உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்யப்பபோவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்