img
img

ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! 200க்கும் மேற்பட்டோர் பத்துமலையில் திரண்டனர்
வெள்ளி 20 ஜனவரி 2017 15:19:21

img

கோலாலம்பூர், ஜன.20- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் வகையில் இங்குள்ள 200க்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளர்கள் பத்துமலையில் ஒன்று திரண்டனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற வேண்டும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான உத்தரவாதத்தை மாநில அரசும் மத்திய அரசும் அளிக்க வேண்டுமென ஆங்காங்கே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் ஜல்லிக்கட்டை ஆதரித்து தமிழகத்தில் பல நகரங்களிலும், மாவட்டங்களிலும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், நாங்கள் அண்டை நாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும் எங்களின் சிந்தனை தமிழகத்தின் மீதும் ஜல்லிக்கட்டின் மேல் உள்ள தடையை உடைக்க வேண்டும் என்றும்தான் உள்ளது. அதனால் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை ஆதரித்து நேற்று பத்துமலையில் கூடியதாக தமிழகத் தொழிலாளர்கள் முழக்க மிட்டனர். மேலும் தமிழகத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்களில் சிலரை போலீசார் அடித்து இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித் தனமாக அதிகாரிகள் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களை உடனடியாக அரசு அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்றும் இங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். காலை 10 மணிக்கு பத்துமலை ஆலயத்தில் திரண்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நண்பகல் 12 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியான முறையில் அவர்கள் போராட்டத்தை நடத்தினர். மேலும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் வகையில் பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முழக்கமிட்டுச் சென்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டின் மீது உள்ள தடையை உடைக்க தமிழகம் உட்பட பல நாடுகளில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த கூட்டங்கள் நியாயத்திற்காக கூடுகின்றனர். போராட்டத்தில் இறங்கியுள்ள ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கைக்கு முறையான பதில் கிடைக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டின் தடையை நீக்கி தமிழர்களின் பலத்தை நாங்கள் காட்டுவோம் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
நாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி!

அமைச்சர் எம்.குலசேகரன்

மேலும்
img
இம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை!

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்

மேலும்
img
குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்

மேலும்
img
30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img