வியாழன் 21, நவம்பர் 2019  
img
img

24 மணிநேர கடையில் கொள்ளையிட்ட இருவர் கைது
வெள்ளி 20 ஜனவரி 2017 15:07:09

img

அம்பாங், ஜன.20- பண்டான் இண்டாவில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கடையில் கொள்ளையிட்ட இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இம்மாதம் 13ஆம் தேதி இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித சோதனை நடவடிக்கையில் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் இங்குள்ள பூங்கா ராயா அடுக்குமாடியில் போலீஸ் அதிகாரிகள் முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொருவரை போலீசார் நள்ளிரவு 1 மணியளவில் பூச்சோங்கில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 118 பல்வகை சிகரெட்டு பொட்டலங்கள், பாராங் கத்தி, தலைக்கவசம், இரு கைப்பேசிகள் உட்பட கொள்ளையிட பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மேல் விசாரணைக்காக 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் முகமட் ஜாஹிட் ஹசான் தெரிவித்தார்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
கோர விபத்து! இரண்டு மாத கைக் குழந்தை தாயின் மடியில் மரணம்!

நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை ...

மேலும்
img
14 ஆண்டுகளில் 256 பேர் போலிஸ் காவலின்போது மரணம்?

போலீஸ் காவலின் போது மரணமடையும் ..

மேலும்
img
எம்எச் 370 தேடுதல் படலம் தொடருமா -தொடராதா?

எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன

மேலும்
img
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! 200க்கும் மேற்பட்டோர் பத்துமலையில் திரண்டனர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img