இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து நாட்டிலுள்ள உணவகங்களிலும் சாப்பாட்டுக் கடைகளிலும் புகை பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள வேளையில், அதனை மீறுவோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மலேசிய நண்பன் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
சட்டத்தை மீறி உணவகங்களிலும் சாப்பாட்டுக் கடைகளிலும் புகை பிடிக்கும் தரப்பினருக்கு முதல் குற்றத்திற்கு 250 வெள்ளியும் இரண்டாவது, மூன்றாவது குற்றங்களுக்கு 350 வெள்ளியுமாக அபராதம் விதிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு மிகவும் பாராட்டுக்குரியது.
அதேவேளையில், விதிக்கப்படும் மேற்கண்ட அபராதத் தொகையை செலுத்தாமல் போகும் தரப்பினரை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு 10 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து உணவகங்களில் புகை பிடித்து வரும் பொறுப்பற்ற தரப்பினருக்கு நல்லதொரு பாடமாகவும் அமையும்.
தனி நபர் ஒருவர் தொடர்ந்து செய்யும் இதுபோன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்காமல் கூடுதலான தண்டனை விதிக்கும் நடவடிக் கையில் அரசாங்கம் இறங்க வேண்டும்.
அதேவேளையில், உணவகங்கள் மற்றும் சாப்பாட்டுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் புகை பிடிப்பதற்காக தனி இடத்தை ஒதுக்கிக் கொடுக்கும் பொறுப்பற்ற உணவக உரிமை யாளர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை அவர்களுக்கான தனி இடத்தை ஒதுக்க அதன் உரிமையாளர்கள் விரும்பினால் அது உணவகத்திலிருந்து 3 மீட்டர் தள்ளியே இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசாங்க மருத்துவமனைகளில் மரணம் அடைவோரின் எண்ணிக்கையில் 35 விழுக்காட்டினர் புகை பிடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் நுரையீரல் தொற்றுநோய், புற்றுநோய், இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
உணவகங்களில் புகை பிடிப்பதினால் புகை பிடிப்பவர் மட்டுமல்லாமல் சிகரெட் புகையை சுவாசிக்கும் உணவகத்திலுள்ள பொதுமக்களும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும் அந்த ஆய்வு கூறியது.
உணவகங்களில் சுத்தமான, ஆரோக்கியமான முறையில் உணவு உட்கொள்வது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையாகும். இதற்கு வழி வகுத்து கொடுத்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு நாம் நன்றி கூறித்தான் ஆக வேண்டும்!
முதல் குற்றத்திற்கு 250 வெள்ளியும் இரண்டாவது, மூன்றாவது குற்றங்களுக்கு 350
மேலும்செம்மைத் தமிழில் முழுமையாகக் கிடைத்திருக்கும் முதலாவது தமிழ் இலக்கண
மேலும்ஒரே மதம் - அதுவே அன்பு ஒரே மொழி - இதயத்தின் மொழி ஒரே ஜாதி - மனித ஜாதி ஒரே
மேலும்