மெக்சிகோ,ஜன.18- மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள். பிரிட் சுற்றுலா விடுதியில் ‘பி.பி.எம். இசை திருவிழா’ என்னும் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் ஆரவாரமாக அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இந்த விபரீத சம்பவம் நடந்த பின்னர் அங்கிருந்த மக்கள் பதட்டத்தில் சிதறியடித்து ஓடினார்கள். இங்கு துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் அந்த இடத்தின் அருகில் உள்ள வேறு சுற்றுலா விடுதிக்கும் சென்று இதே போல விபரீத செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் ஒருவர் அந்த விடுதியின் காவலாளி என கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை இதுவரை போலீசார் வெளியிடவில்லை. மெக்சிகோவில் குற்றமும், வன்முறையும் அதிகளவில் நடப்பதாகவும் இந்த துப்பாக்கி சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்