img
img

ஈப்போவில் பொது மக்களைக் கவரும் 55 அடி உயர மாபெரும் கிறிஸ்துமஸ் மரம்
திங்கள் 23 டிசம்பர் 2019 08:44:07

img

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈப்போவில் உள்ள சுமார் 115 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த லூர்து மாதா தேவாலய வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்துமஸ் மரம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

சுமார் 20,000 வெள்ளி செலவில் இந்த பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தில் உறுப்பியம் பெற்றுள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு இதனை உருவாக்கியுள்ளனர் என  இதற்கு முன்னோடியாக விளங்கிய ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் ஜோசப் கூறினார்.

இதன்  உயரம் 55 அடி. அகலம் 20 அடி. கடந்த 2017 இல் இதனை தயார் செய்வதற்கு ஒரு மாதம் பிடித்ததாக அவர் சொன்னார்.

கிறிஸ்துமஸ் தொடங்கி மூன்று வாரங்கள் வரையில் இது   தேவலாய வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.  ஜாலான் சிலிபின் பிரதான சாலையில் லூர்து மாதா தேவாலயம் அமைந்துள்ளதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நாட்டில் உள்ள தேவாலயங்களில் வரலாற்றுப்பூர்வ ஆலயமாக இது விளங்கி வருகிறது என்று இந்த தேவலாயத்தில் உறுப்பியம் பெற்றுள்ள நாடறிந்த எழுத்தாளர் அன்னக்கிளி ராசையா கூறினார். இந்த தேவாலயம் 1905 ஆம் ஆண்டு இங்கு தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
நாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி!

அமைச்சர் எம்.குலசேகரன்

மேலும்
img
இம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை!

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்

மேலும்
img
குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்

மேலும்
img
30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img