லண்டன்,ஜன.18- 2050ஆம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. ஆனால் அவை அக்கும் தன்மை அற்றதாக இருப்பதால் மனித இனத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. 1964ஆம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு கடந்த 2014ஆம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. இந்நிலையில் வரும் 2050ஆம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இங்கிலாந்தின் தவோஸ் நகரில் நடந்தது. அதில் இந்தியா உள்பட உலகின் முன்னணி தொழிற்சாலைகளின் அதிபர்கள் 40 பேர் கலந்து கொண்டனர். தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விவாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்