தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது உடலை இழுத்து வந்து செண்டிரல் சதுக்கத்தில் 3 நாட்களுக்குத் தொங்கவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு முழு விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவத் தளபதியாக இருந்த முஷரப் 2001ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15ஆம் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார்.
2016ஆம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷரப் பின்னர் நாடு திரும்பவில்லை. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்லாமாபாத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தேச துரோக வழக்கை விசாரித்து வந்தன. கடந்த 17ஆம் தேதி சிறப்பு கோர்ட்டில் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 நீதிபதிகள் இந்த தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருந்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்