நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஜாலான் ஈப்போ கம்போங் கோவில் ஹிலிருக்கு அருகில் உள்ள செந்தூல் உத்தாமா இடைநிலைப்பள்ளிக்கு அருகில் பலகை வீடுகளில் பிடித்த தீயில் 13 வீடுகள் அழிந்தன.
இதில் ஒருவீடு இந்தியருக்கு சொந்தமானதாகும். கிறிஸ்துமஸ் பெருநாள் நெருங்கி வரும் நேரத்தில் ஜி.செபஸ்தியன் என்பவரின் வீடு அழிந்தது. கிட்டத்தட்ட 11 வீடுகள் முற்றாக சாம்பலாகின.
பிற்பகல் 2.53 மணியளவில் தகவல் கிடைத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக தீயணைப்புப் பிரிவு நட வடிக்கைப் பிரிவு தலைவர் மியோர் முகமட் பிக்ரி கூறினார்.
35 வீரர்கள் தீயை அணைக்க போராட்டம் நடத்தியும் தீயில் வீடுகள் முற்றாகச் சாம்பலாகியதாக அவர் தெரிவித்தார்.
அனைத்தும் பலகை வீடுகள் என்றார் அவர். 13 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் செந்தூல் சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தீவிபத்துக்கான காரணங்கள் ஆராயப்படும் என்றார் அவர்.
இதனிடையே ஜாலான் ஈப்போ பத்து கெந்தோமான் (இராணுவ முகாம் அருகில்) வரிசை கடையில் உள்ள ஒரு கடை தீயில் அழிந்தது.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்