img
img

டிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்
வெள்ளி 20 டிசம்பர் 2019 12:39:06

img

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  அங்கு எதிர்க்கட்சியாக ஜனநாயக கட்சி இருந்து வருகிறது.  அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

 இதில், முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான ஜோ பிடன், அதிபர் டிரம்புக்கு முக்கிய போட்டியாக இருந்திடுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பிடனின் மகனுக்கு உக்ரேன் நாட்டிலுள்ள எரிவாயு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.  இதுபற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அதிபரிடம் டிரம்ப் கேட்டு கொண்டார்.

இதனால் டிரம்ப், அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது.

இதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்து, அதன் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் அது தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 உறுப்பினர்களும், டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களும் உள்ளனர்.  இதனால் அங்கு கண்டன தீர்மானம் எளிதில் நிறைவேறும் சூழல் இருந்தது.

இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

எனினும் இந்த பதவி நீக்க கோரும் விவகாரம் பற்றி டிரம்ப் கூறும்பொழுது, அரசை கவிழ்க்கும் முயற்சி, அமெரிக்கா மீது நடைபெறும் தாக்குதல் என கூறினார்.

இந்த கண்டன தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும்.  ஆனால் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால் கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, டிரம்பின் பதவி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img