பண்டார் மலேசியா திட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் களையப்பட்ட பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ள அத்திட்டம் நாட்டின் நகர மேம்பாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக நேற்று அத்திட்ட ஒப்பந்த நிகழ்வில் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
கோலாலம்பூரில் அடுத்த 20 ஆண்டுகளில் வெ.14,000 கோடி மதிப்பீட்டிலான கலப்புப் பயன்பாடு, போக்குவரத்து சார்ந்த அத்திட்டம் நாட்டிற்கு கணிசமான பொருளாதார வளர்ச்சியை வழங்கும். அத்துடன் அத்திட்டம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை குறிப்பாக கட்டுமானம் அறிவாற்றல், தொழில் முனைவு, தொழில் நுட்பத் துறைகளில் ஏற்படுத்தும்.
பண்டார் மலேசியா திட்டப் புதுப்பிப்பு பெரும்பாலும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் முயற்சியால் நடந்துள்ளது. அத்திட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் அகற்றப்பட்டதையடுத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
பண்டார் மலேசியா தற்போது நாட்டிற்கு மேலும் சமச்சீரான நியாயமான அடிப்படைகளை வழங்குகிறது என்றார் லிம்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்