அமெரிக்காவில் கணவரின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்திருந்த பெண்ணின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் (வயது 75). இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ் ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார்.
கடந்த மாதம் 22ஆம் தேதி ஜீன் சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநலச் சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஜீன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்தார். அவரின் மரணம் இயற்கையானது என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து வீட்டை மேலும் சோதனை செய்ததில், ஜீன் மாதர்சின் கணவரான பால் எட்வர்ட்சின் உடல் அங்கிருந்த பிரீசரில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுடன் ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.
அதில் என் மனைவி என்னைக் கொல்லவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. அது பால் எட்வர்சின் கையெழுத்து எனவும் அந்த கடிதம் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதப்பட்டது என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
ஜீன் மாதர்ஸ் அவரின் கணவரைக் கொலை செய்தாரா அல்லது வேறு யார் உதவியுடனும் இதைச் செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஜீன் மாதர்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் ஒரு லட்சத்து 77 ஆயிரம் டாலரை அரசு சலுகையாகப் பெற்றிருக்கலாம். மேலும் பால் எட்வர்சின் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னாள் ராணுவ விவகாரத் தொடர்பான காசோலைகளை வாங்கியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
பால் எட்வர்ட்ஸ் உடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தில் எழுதப்பட்டிருந்த மற்றும் சில தகவல்களை பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்