மத்திய அமெரிக்காவில் உள்ள அழகான நாடு ஹோண்டுராஸ். இந்நாடு பழங்காலத்தில் ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு நகரம்தான் குரங்கு நகரம். இது, வெள்ளை நகர் என்று அழைக்கப்பட்டதாகவும், குரங்கு கடவுள் ஆட்சி செய்ததாகவும், ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலப்போக்கில் இந்த நகரம் மண்ணில் புதைந்துவிட்டது. அங்கு ஏராளமான செல்வ வளங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இதனால் புதையுண்ட நகரின் ரகசியங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். ஹோண்டுராஸ் வனப்பகுதியில் புதைந்த இந்த நகரத்தின் சுவடுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளர் பிரஸ்டன் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் எல்கின்ஸ், ஆவணப்படத் தயாரிப்பாளர் பில் பெனின்சன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அடர்ந்த வனப்பகுதியில் அதிநவீன கதிர்வீச்சு கேமரா மூலம் நகரத்தின் அனுமான வரைபடத்தை தயாரித்துள்ளனர். இந்த நகரமே புதையுண்டதாக கருதப்படும் குரங்கு கடவுள் நகரம் மற்றும் வெள்ளை நகரம் என்று கூறப்படுகிறது. இந்த நகரில் கிபி 1000-1500 ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் வசித்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் இந்த நகரம் 16ம் நூற்றாண்டில் கைவிடப்பட்டுள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் காரணமாக இந்த நகரத்தை கண்டறிவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகியுள்ளது. சபிக்கப்பட்ட நகரம்: குரங்கு கடவுள் நகரம் புதையுண்டது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் கூறப்படுகிறது. இது சபிக்கப்பட்ட நகரம் என்றும், இங்கு வசித்த மக்களை இனந்தெரியாத நோய்கள் தாக்கியதாக ெசவி வழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. நோய் தாக்கியதால் ஏராளமான பொதுமக்கள் இறந்ததாகவும், அதனால் இந்த கிராமத்தில் வசிக்க பயந்து அங்கிருந்த மற்றவர்களும் வெளியேறியதாகவும் கதைகளும் உலா வருகின்றன. குரங்கு கடவுள் சபித்ததால் தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும், இதனால் அந்த பகுதிக்கு செல்வதை சுற்றியுள்ள மக்களும் தவிர்த்து வந்துள்ளனர். யாருடைய தொடர்பும் இல்லாதுபோனதோடு, அங்கிருந்து மக்களும் வெளியேறியதால் காலப்போக்கில் அழிந்து இயற்கை காரணங்களால் மண்ணில் புதையுண்டதாகவும் ஒரு சாரார் கருத்து கூறியுள்ளனர். அஞ்சும் ஆராய்ச்சியாளர்கள்: டக்ளர் பிரஸ்டன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு புதையுண்ட வெள்ளை நகரத்துக்குள் மறைந்திருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்கும் வகையில் தங்களது ஆய்வு பயணத்தை தொடங்கினார்கள். ஆனால் சபிக்கப்பட்ட நகரத்துக்குள் சென்றால் ஆராய்ச்சியாளர்களுக்கு நோய் தாக்கக்கூடும் என்றும் அச்சுறுத்தப்பட்டனர். எனினும் ஆராய்ச்சியாளர்கள் குழு தங்களுடைய பயணத்தை தொடங்கியது. கொடிய பாம்புகளும், கடுமையான சூழல்களையும் கடந்து மழைக்காட்டினுள் பயணித்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய நகரை தேடிச்சென்றனர். ஹோண்டுராஸ் மற்றும் நிகாரகுவா எல்லைப்பகுதியில் இந்த நகரம் கண்டறியப்பட்டது. அந்த பகுதியில் பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தற்கான அடையாளங்கள், அங்கிருந்த புதையுண்ட பொருட்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது. முதலில் ஆராய்ச்சியாளர்கள் பார்த்தது தரையில் ஜாகுவார் தலையுடைய சிற்பம் தான். மேலும் கலைப்பொருட்கள், மண்பாண்டங்கள், எலும்புகூடுகள் உள்ளிட்டவையும் அங்கு கண்டறியப்பட்டது. அங்குள்ள பாறைகளில் குரங்கு கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். இந்நிலையில் அனைவரும் கூறியது போன்றதொரு நிலையை ஆராய்ச்சியாளர் குழு சந்திக்க நேர்ந்தது. தோலை தின்னும் ஒருவித கொடிய நோயால் குழுவில் சிலர் பாதிக்கப்பட்டனர். இது மண்ணுக்குள் ஊடுருவி செல்லும் ஒரு கொடிய விஷ வண்டு கடித்ததால் உருவானதாகும். இந்த நோயால் அவர்கள் உயிருருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தை உணர்ந்த அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற முடிவு செய்தனர். இதனால் அக்குழுவில் விஷ கடியால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் தங்களது பயணத்தை தொடர முடியாமல் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்றவர்கள் ஆய்வு பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவடைந்தால் அடர்ந்த காட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புதையுண்டு கிடக்கும் குரங்கு நகரத்தில் மறைந்திருக்கும், மர்மங்கள் வெளியே தெரியவரும்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்