துபாய்,
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று துபாயில் உள்ள மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் துபாயில் வசித்து வருகிறார். இவர் மீது ராஜ துரோகம் செய்ததாக வழக்கு தொட ரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 2016ஆம் ஆண்டு துபாய்க்கு சென்றார். ஆனாலும் அவர் யாருடனும் பேசவோ, சந்திக்கவோக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவரின் நரம்புகள் வலுவிழந்து நிற்பதற்கும் நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார்.
அவர் உடல்நிலை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லமுடியாத நிலையில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் நேற்று அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்