வாஷிங்டன்,
வர்த்தகப் போர் எதிரொலியாக, அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. இது இருநாடுகளிலும் பொருளாதாரம் தவிர்த்து, வேறு சில பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகு வாக குறைந்துள்ளதாக அமெரிக்க சுற்றுலாத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க சுற்றுலாத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு வரை 5.7 சதவீதமாக இருந்த சீன சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டு 2.9 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
எனினும் இது தற்காலிகமானதே. இந்தாண்டு இறுதிக்குள் சீன பயணிகளின் வருகை 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது என தெரி விக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்