பாரிஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரம் உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும். மேலும் இது உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தலமா கவும் விளங்குகிறது. 1887ஆம் ஆண்டு தொடங்கிய ஈபிள் கோபுரத்தின் கட்டுமான பணிகள் 2 ஆண்டு 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகே முடிவு பெற்றதாக கூறப்படுகிறது. 1889ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈபிள் டவர் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈபிள் கோபுரம் தற்போது தனது 130ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஈபள் கோபுரத்தில் சாகச பயணம் செய்யும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈபிள் கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து, 800 மீட்டர் தொலைவில் உள்ள 18ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராணுவ அலுவலகம் வரை கம்பி கட்டப்பட்டுள்ளது.
இந்த கம்பியில் பொருத்தப்பட்ட பெல்ட்டில் அமர்ந்துகொண்டு கம்பி வழியே பறந்து சென்று, பாரிஸ் நகரின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்த வசதி பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு சமூக வலைத்தளங்கள் மூலம் நடத்தப்படுகிறது.சுற்றுலா பயணிகள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்