வாஷிங்டன்,
அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து 18.5 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்.உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ். இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ், மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர். அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார்.
அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பெசோஸ் சொந்தக்காரர் ஆனார்.இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக மெக்கின்சி உறுதிமொழி அளித்துள்ளார்.
அதவாது 18.5 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்க இருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் வாழ்வதற்கு தேவையானதை விட கூடுதலாக, பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்