தோக்கியோ, மே 29-
வடகொரியா நடத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.
கிழக்காசிய நாடான வடகொரியா சமீபத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு வாரியத்தின் விதிகளை மீறி வடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனை கிழக்காசிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என மற்றொரு கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே கவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் ஜப்பான் புதிய மன்னர் மசாகோவை சந்திக்கவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் டிரம்ப் ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்கு வந்தார்.அவர் நேற்று அமெரிக்க திரும்பும் முன் ஷின்சோ அபே உடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதில் தப்பில்லை என்றார். அத்துடன் அணுகுண்டு ஏவுகணை அல்லது கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவு கணை சோதனையை வட கொரியா நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதைக்கேட்டு டிரம்ப் அருகில் இருந்த அபேவின் முகம் சுருங்கியது. டிரம்ப் புறப்பட்டு சென்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அபே, டிரம்ப் பேச்சு வருந்தத்தக்கது எனினும் அவர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடன் புதிய அணுகுமுறையை பின்பற்றத் துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்