அபுஜா,
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 16 பேர் கொல்லப்பட்டனர்.நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட போகோ ஹராம் பயங்கரவாதிகள், அரசுப் படைகள் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில் பதற்றம் நிறைந்த வடகிழக்கு மாநிலமான போர்னோவில் நேற்று போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மைதுகுரியின் புறநகர்ப்பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், உள்ளூர் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 5 பேர், பொதுமக்களில் 11 பேர் என 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் கருப்பு அங்கி அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதல் நடத்தியதாகவும் பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடி புதர்களில் மறைந்துகொண்டதாகவும் பொதுஜன கூட்டு அதிரடிப்படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்